search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு திருட்டு"

    அச்சிறுப்பாக்கம் பகுதியில் காரில் வந்து ஆடு திருடியது தொடர்பாக ஒருவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    அச்சிறுப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது, சாலையின் ஓரமாக கார் ஒன்று டயர் பஞ்சராகி நின்றது. அந்த காரின் வெளியே இருந்த 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரின் பின்பகுதி கதவை திறந்து காட்டுமாறு கூறினர்.

    அதில் 18 ஆடுகள் இறந்த நிலையில் இருந்தன. உடனே, அங்கு நின்ற 3 வாலிபர்களும் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவன் பல்லாவரத்தை சேர்ந்த சாய் குமார் என்பது தெரிந்தது. அவர்கள் வந்தவாசி அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று ஆடுகளை திருடி காரில் கொண்டு வந்தது தெரிந்தது. வரும் வழியில் அச்சிறுப்பாக்கம் பகுதியிலும் அவர்கள் ஆடு திருடியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து காருடன் ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்குன்றம் பகுதியில் ஆடு திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களை புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    செங்குன்றம்:

    செங்குன்றம் பம்மதுகுளம் அருகே செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடு ஒன்றுடன் செங்குன்றத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த டில்லிபாபு, சூர்யா என்பதும் இவர்கள் 2 பேரும் ஆடு திருடர்கள் என்பதும் தெரியவந்தது. செங்குன்றம் போலீசார் அவர்களை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    இதுவரை இவர்கள் செங்குன்றம் மற்றும் செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    குலசேகரன்பட்டினத்தில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை பிடித்து ஆட்டோவில் ஏற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு புதுக்குடியேற்று கிராமத்தை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது58). இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது ஆடுகளை குலசேகரன்பட்டினம் காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு அங்குள்ள ஒரு மரத்தின் கீழ் நிழலுக்காக அமர்ந்து இருந்தார்.

    அப்போது அங்கு ஆட்டோவில் வந்த இருவர் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை பிடித்து ஆட்டோவில் ஏற்றினர். இதைப் பார்த்த பொன்பாண்டி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் ஆட்டோவில் வந்த இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்பு அவர்களை குலசேகரன்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இருவரிடமும் விசாரணை நடத்தினர்

    விசாரணையில் அவர்கள் குலசேகரன்பட்டினம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமணி (35), அவரது நண்பர் உதயமார்த்தாண்ட கோவிலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இசக்கிபாண்டி (35) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஐர்படுத்தினர்.
    ஆண்டிப்பட்டி அருகே கிடையில் ஆடுகள் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள மயிலாடும்பாறை காமன்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் தவசி (வயது40). இவர் சொந்தமாக கிடை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அங்கிருந்த 2 ஆடுகளை வாலிபர்கள் 2 பேர் திருடிக்கொண்டு சென்றனர். இதனை பார்த்ததும் தவசி அவர்களை விரட்டி பிடித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அவர்கள் கம்பத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் விஜய் (25), ராமநாதன் மகன் சுரேஷ் (25) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    ×